Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லயன் கிங்கிற்கு அரவிந்த்சாமியும் குரல் கொடுக்கிறார்

29 ஜூன், 2019 - 11:33 IST
எழுத்தின் அளவு:
Aravindswamy-voice-to-Lion-King

20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த லயன் கிங், கார்டூன் படத்தில் ஹீரோ சிம்பாவுக்கு குரல் கொடுத்தவர் அரவிந்த்சாமி. ஆனால் இப்போது வெளிவர இருக்கும் லயன் கிங் சூப்பர் அனிமேஷன் படத்திற்கு அவர் வில்லன் சிங்கம் ஸ்காருக்கு குரல் கொடுக்கிறார்.

அந்த காட்டு ராஜ்யத்தில் வாரிசுரிமைப்படி மூத்த அண்ணன் ஸ்கார்தான் ராஜாவாகி இருக்க வேண்டும். ஆனால் அவர் கழுதை புலிகளுடன் இணைந்து தீய காரியங்களில் ஈடுபடுவதால் நல்லவரான தம்பி மன்னர் ஆகிவிடுகிறார். இதனால் கழுதை புலிகளுடன் இணைந்து சதி செய்து தம்பியை கொன்று விடுகிறார் ஸ்கார். தம்பி மகன் சிம்பாவை தப்பிக்க வைக்கிறார் ராஜகுரு. தப்பித்த சிம்பா வளர்ந்து ஆளாகி நண்பர்கள் துணையுடன் ஸ்காரின் கூட்டத்தை அழித்து காட்டு ராஜா ஆவதுதான் கதை.

இதில் ஹீரோ சிம்பாவுக்கு சித்தார்த் குரல் கொடுக்கிறார். வில்லன் சிங்கம் ஸ்காருக்கு அரவிந்த்சாமி குரல் கொடுக்கிறார். இதுகுறித்து அரவிந்த்சாமி கூறியதாவது:

20 ஆண்டுகளுக்கு முன்பு தி லயன் கிங்கில் சிம்பாவுக்கு டப்பிங் செய்தபோது ஒரு அனிமேஷன் படத்திற்கு டப்பிங் செய்வது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. தி லயன் கிங்கின் புதிய பதிப்பில் ஒரு கதாபாத்திரத்திற்காக டப்பிங் செய்ய இந்த முறை என்னை அணுகியபோது நான் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்ய விரும்பினேன். ஏனெனில் அந்த கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பல பரிமாணங்களை கொண்டது. இது தொழில்முறை அனுபவத்தை வளப்படுத்தியது என்றார். படம் அடுத்த மாதம் 19ந் தேதி வெளிவருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீரா மிதுன் பற்றி அவதூறு: தாயார் போலீசில் புகார்மீரா மிதுன் பற்றி அவதூறு: தாயார் ... இரண்டு நாட்களாக ஏமாற்றும் பிக் பாஸ் இரண்டு நாட்களாக ஏமாற்றும் பிக் பாஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in