பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் |
சமீபகாலமாக தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த போதை மாபியா தொடர்பாக கடந்த மாதம் ஜாபர் சாதிக் என்கிற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் மதுரையில் இரவு நேரத்தில் சில போதை இளைஞர்கள் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞரை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் பாபி சிம்ஹா நடித்த உறுமீன் மற்றும் பயணிகள் கவனிக்கவும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சக்திவேல், தானும் இது போன்று போதை ஆசாமிகளில் தாக்குதலுக்கு ஆளானதாக கூறி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, சில போதை ஆசாமிகள் தன்னிடம் வழி மறித்து வம்பு இழுத்து தாக்க முயற்சித்ததாகவும் அதே சமயம் அந்த நேரத்தில் பொதுமக்கள் உதவியுடன் தான் தப்பியதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு மற்றும் காவல்துறை இந்த போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.