ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய விமர்சனம், 'பெத்தி' இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? |

மகேஷ் பாபு நடிப்பில் வாரணாசி என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்ற போது தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று கூறிய ராஜமவுலி, எனக்கு அனுமனின் ஆசி இருப்பதாக என் தந்தை கூறினார். ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப சிக்கல் வந்த போதும் எனக்கு அந்த அனுமான் உதவி செய்யவில்லை. அதனால் அவர் மீது நான் கோபத்தில் இருக்கிறேன். அதோடு, என் மனைவியும் அனுமனின் தீவிர பக்தை. அவரது அனுமன் இப்போதாவது எனக்கு உதவி செய்வாரா என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்து அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, நாத்திகரான இவர் ஏன் இந்து புராணங்கள் அடிப்படையில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதோடு, டெக்னிக்கல் பிரச்சினை ஏற்பட்டது, இவரது குழுவினரின் திறமையின்மை. ஆனால் அதற்கு இவர் தெய்வத்தை குறை கூறுவது ஏன் என்றும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் ராஜமவுலிக்கு ஆதரவாக இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ராஜமவுலி ஒரு தலை சிறந்த இயக்குனர். அவர் நாத்திகராக இருப்பது ஒரு குற்றம் அல்ல. ராஜமவுலி தனது நம்பிக்கைகளும் வெளிப்படுத்த எல்லா உரிமையும் அவருக்கு இருக்கிறது. அதோடு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அற்புதமான படங்களை கொடுத்து அவர் வெற்றி பெற்றுள்ளார் என்று அவருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் ராம் கோபால் வருமா.