Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கோடம்பாக்கம் நொறுக்ஸ்

நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர் கமல்ஹாசனை, நேற்று சந்தித்தனர். லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில், உத்தம வில்லன் படம், ஐந்து விருதுகளை பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காமன்வெல்த் போட்டியில், இந்திய தடகள வீரர்களுக்கு பயிற்சி அளித்த நாகராஜ் என்பவரிடம் பயிற்சி பெற்று, ஈட்டி படத்தில் நடித்துள்ளார் அப்படத்தின் நாயகன் அதர்வா. பெங்களூரில் நடந்த, 'கிளைமாக்ஸ்' காட்சி படப்பிடிப்பில், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற வீரர்களும், அதர்வாவுடன் நடித்து உள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் நடித்த, ரஜினி முருகன் படம், டிச., 4ல் வெளியாகும் என, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளம் குறித்து, நடிகர் தனுஷ், வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பது தான், சமூக வலைதளங்களில் எனக்கு கிடைக்கும் பலன். ரசிகர்கள் என்னையும், என் படங்களை பற்றியும், என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வசதியாக நல்ல தளமாக உள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் சுப்பராயனின் மகன், திலிப் சுப்புராயன் தயாரித்து, நடிகர்கள் விமல், பசுபதி, நடிகை நந்திதா நடித்து, தங்கம் சரவணன் இயக்கும், அஞ்சல படத்தின் இசை, இன்று வெளியாகிறது. இப்படத்தின் கதையில், 'டீக்கடை'யை முக்கிய கதாபாத்திரமாக்கி உள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி நடித்த, சவுகார்பேட்டை படம், எல்லா ஏரியாவிலும் விற்றுள்ளது. படத்தின் தரமும், வியாபாரமும் திருப்திகரமாக இருந்ததால், தயாரிப்பாளர்கள் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ், இயக்குனர் வடிவுடையானுக்கு புது காரை பரிசாக தந்துள்ளனர்.

சவுகார்பேட்டை படத்தை தொடர்ந்து, இயக்குனர் வடிவுடையான், பொட்டு என்ற படத்தை இயக்குகிறார். மருத்துவ கல்லூரியின் பின்னணியில் உருவாகும் இப்படமும் பேய் கதையே. இதில், நடிகர் பரத் நாயகனாக நடிக்கிறார். நடிகர்கள் சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, நடிகை ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பழம் பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ், படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு இம்மாதம் துவங்குகிறது.

'கிளாமர்' வேடம் கைகொடுக்கும் என நினைத்து, த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்த நடிகை மனிஷா யாதவுக்கு நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றாக ஆகியுள்ளது. முன்னணி நடிகரின் படத்தில், இரண்டாவது நாயகியாக வர வேண்டிய வாய்ப்பு, 'கிளாமர் ரோலால்' கை நழுவி போய் விட்டது. இதனால், 'கிளாமர்' வேடங்களை கொஞ்சம்தள்ளி வைக்கும் முடிவில் உள்ளார்.

மலையாள படங்களில் நடித்து வரும், மும்பையைச் சேர்ந்த ஸ்ருதி மேனன், ஓரினச்சேர்க்கை படங்களில் நடித்து பிரபலமானவர். சமீபத்தில், நகை கடை விளம்பரத்திற்காக, பத்திரிகைக்கு அரை நிர்வாண போஸ் கொடுத்து, கேரள ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

நடிகர் ஜெய், நடிகை- சுரபி நடித்து வரும், புகழ் படத்தை வெளியிடும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff
    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in