Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கோடம்பாக்கம் நொறுக்ஸ்

சபரிஷ் நந்தா இயக்கி, எம்.பாசில் இசையமைத்த, சென்னையில் ஒரு மழை காலம் படத்தின் இசை இன்று வெளியிடப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது; இதையடுத்து, இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

நான் இயக்கிய, படம் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த படத்தை இயக்குவதற்கும், அதற்கான முன்னேற்பாடுகளுக்கும் சிறிது காலம் தேவை. என் அடுத்த படம் குறித்து நானே அறிவிப்பேன் என, இயக்குனர் விக்னேஷ் சிவன், டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்களின் தோல்வியால் துவண்டு போயிருக்கும் இயக்குனர் வெங்கட்பிரபு, தனக்கு முதலில் கைகொடுத்த, சென்னை - 600028 படத்தின், இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக, கோலிவுட்டில் பேசப்படுகிறது.

மலேஷியாவில் நடைபெறும், கபாலி படப்பிடிப்பில், ரஜினி யுடன், நடிகை தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், நடிகை ரித்விகா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடும் ரஜினி, இந்தாண்டு, கபாலி படப்பிடிப்பு குழுவினருடன், கேக் வெட்டி தீபாவளி கொண்டாடியுள்ளார்.

ஜெயம் ரவி - லட்சுமி மேனன் நடிப்பில், சக்தி சவுந்திரராசன் இயக்கும், மிருதன் படத்தின், சாட்டிலைட் உரிமையை, முன்னணி தனியார், டிவி சேனல், பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இப்படத்தில், புகை பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறவில்லை என, கூறப்படுகிறது.

கோலிவுட்டில் படங்களின் தலைப்புக்கு பஞ்சம் ஏற்பட்டது போலவும், படத்திற்கு ஆரம்பத்திலேயே விளம்பரம் கிடைப்பதற்காகவும், ரஜினி படத்தலைப்பை தங்கள் படத்திற்கு வைப்பது தொடர்ந்து வருகிறது. பில்லாவில் துவங்கி தங்கமகன் வரையில் நீண்ட அப்பட்டியலில் தற்போது, விஜய சேதுபதி நடிக்கும் படத்திற்கு, தர்மதுரை என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை, 'ஸ்டூடியோ 9' நிறுவனம் தயாரிக்கிறது.

இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த். தன் பெயரை ஸ்ரீகாந்த் தேவாவாக மாற்றி இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது மார்க்கெட் சரிந்ததால், தன் பெயரை ஸ்ரீ என மாற்றி, ஜீவா - நயன்தாரா நடிக்கும், படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு பின், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த படத்தில் விக்ரமிற்கு பதில், வேறொருவர் நடிப்பதாக, கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பி உள்ளது.

கடத்தப்படும் மகனை மீட்க முற்படும் போலீசாக கமல், அவரை பின் தொடர்பவராக நடிகை த்ரிஷா, வில்லனாக மிரட்டும் பிரகாஷ் ராஜ், இவர்களை மையப்படுத்தி, ஒருநாள் இரவில் நடக்கும், 'த்ரில்லிங் ஆக் ஷன்' படமே தூங்காவனம். இப்படம் தீபாவளி ரேசில், அஜித்தின் படத்தை விட, முதல் நாள் வசூலில் பின்தங்கினாலும், விரைவில் முந்தும் என நம்பிக்கேயாடு கூறுகிறது, 'கோலிவுட்' வட்டாரம்.

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff
    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in