Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கோடம்பாக்கம் நொறுக்ஸ்

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும், 59வது படத்தின் தலைப்பு இன்னும் அதிகாரபூர்வமாக முடிவாகவில்லை. படத்தின் தலைப்பு, காக்கி, வீரன், சத்ரியன் என, ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என கூறப்பட்டது. தற்போது, நடிகர் ஜீவா படத்திற்காக பதிவு செய்யப்பட்ட, தாறுமாறு தலைப்பு, விஜய் படத்திற்கு சூட்டப் பட இருப்பதாக கூறப்படுகிறது.

மலேஷியாவில் நடந்து வரும், கபாலி படப்பிடிப்பு தளத்தின் படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால், படம் வெளியாகும் போது, சுவாரஸ்யம் இருக்காது என, நடிகர் ரஜினியும், இயக்குனரும் வருத்தப்பட ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து, படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இயக்குனர் பாலா இயக்கிய, தாரை தப்பட்டை படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்ததாக, நடிகர்கள் விஷால், அதர்வா, ஆர்யா உள்ளிட்ட பல ஹீரோக்கள் நடிக்கும் வகையில், புதிய படத்தை பாலா இயக்க இருப்பதாக, 'கோலிவுட்'டில் தகவல் வெளியாகி உள்ளது.

'சவுகார்பேட்டை படம் நவ., 27ல் வெளியாகிறது. அதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என, படத்தின் நாயகன், நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தேவை என்றால், தன் அறக்கட்டளையின், 97907 50784 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள, நடிகர் ராகவா லாரன்ஸ், 'டுவிட்டரில்' வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில், கடலூர், விழுப்புரம், நாமக்கல், காஞ்சி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு, உடை மற்றும் மருந்து பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

அனிருத் இசையமைத்து, நடிகர் தனுஷ் பாடிய, 'கொலவெறி' பாடலை, 'யூ டியூப்'பில் இதுவரை, 9.94 கோடி பேர் பார்த்துள்ளனர். விரைவில், 10 கோடி எண்ணிக்கையை தொட உள்ள கொலவெறி பாடல், அனிருத் இசையமைத்த, 3 என்ற அவரது முதல் படத்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

'ஹன்சிகா.காம்' என்ற பெயரில், நடிகை ஹன்சிகாவுக்கு தனி இணைய தளம் விரைவில் துவங்கப்பட உள்ளது.

'நடிகை ஹன்சிகா எனக்கு ராசியான நடிகை மட்டுமல்லாது ஆசிரியையும் கூட' என, 'டுவிட்டரில்' குறிப்பிட்டுள்ளார், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி.

'என் வீட்டு மாடித் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையே, சமையலுக்கு பயன்படுத்துகிறேன்' என, நடிகர் மாதவன், 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff
    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in