Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கோடம்பாக்கம் நொறுக்ஸ்

இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் சூர்யாவை வைத்து, துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், அந்த படம் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது. அதன் பின், கவுதம் மேனன் இயக்கிய படங்கள் தோல்வி அடைந்தன. மாசு என்கிற மாசிலாமணி படம் சூர்யாவை கைவிட்டது. இந்த நிலையில், சூர்யா, கவுதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைய, சிலர் எடுத்த முயற்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

நடிகர் தனுஷ், இயக்குனர்- வெற்றி மாறன் இணையும், வடசென்னை படத்தில், குடிசைவாழ் பெண்ணாக, நடிகை சமந்தா நடிக்க உள்ளார். இதற்காக, சென்னை பாஷையில் பேச, தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.

படங்கள் இன்றி தவித்து வந்த, கே.பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனு, புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார்; அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெற்றிக்காக, வணிக ரீதியாக பிரபலமாக உள்ள நடிகர், நடிகையரை, 'புக்' செய்ய, தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

''நடிகர் விக்ரம் - சமந்தா நடித்த, 10 எண்றதுக்குள்ள படம், 175 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடுகிறது. படத்தில் நடித்த விக்ரம், சமந்தா மற்றும் தயாரிப்பாளர் என அனைவருக்கும் சந்தோஷமே. 'படம் தோல்வி' என கூறுபவர்கள், வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர்,'' என, படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

பாகுபலி கதாநாயகன் பிரபாஷுக்கு, சமீபத்தில், திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது, என, சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. பி.டெக்., படிக்கும் பெண்ணுடன் நிச்சயம் முடிந்துள்ளது. பெண்ணின் படிப்பு மற்றும், பாகுபலி -- 2 படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் நடக்கும் என, கூறப்படுகிறது.

நடிகர் அஜித், காலில் ஏற்பட்ட காயத்திற்காகவும், தோள்பட்டை வலிக்காகவும், நேற்று முன்தினம், சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 'அறுவை சிகிச்சை, ஆறு மணி நேரம் நடந்தது. அஜித் நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில், 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார்' என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் பின் அஜித், ஆறு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டம், காடாம்புலியூர் கிராமத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால், தன் ரசிகர் மன்றம் மூலம், அரிசி, வேட்டி, சேலை மற்றும் நிதி உதவி வழங்கியுள்ளார்.

நடிப்பு, இயக்கம், திரைக்கதை அமைப்பு போன்றவற்றுக்கு இணைய தளம் வாயிலாக பயிற்சி அளிக்க, நடிகரும், இயக்குனருமான பாண்டிய ராஜன், r.pandiarajan.com என்ற இணையதளத்தை துவக்கியுள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நடிகர் பிரசாந்தின், சாகசம் படத்தின் இசை நேற்று நள்ளிரவு வெளியானது.

கடந்தாண்டு வெளியான, அரண்மனை படம், 22 கோடி ரூபாய் வசூலித்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்தும், பேய் படத்திற்கு ரசிகர்கள் தரும் அமோக ஆதரவாலும், அரண்மனை - 2 தயாராகி வருகிறது. சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படத்தில், ஹன்சிகா, த்ரிஷா மற்றும் பூனம் பஜ்வா ஆகியோர், படத்தில் பேய் அவதாரம் எடுத்துள்ளனர். படத்தில் நாயகன் சித்தார்த்; பொங்கலுக்கு படம் வெளியாகிறது.

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in