அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி |

கடந்த 2014ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, வித்யூத் ஜம்வால், சமந்தா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'அஞ்சான்'. இந்த படம் வெளியாகுவதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்,வெளியான பிறகு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து அது இந்த படத்தின் வெற்றியையும் பாதித்தது. இந்த படத்தின் மூலம் தோல்வி முகத்திற்கு சென்ற லிங்குசாமி, சூர்யா இன்னும் வெற்றி பாதைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் அஞ்சான் திரைப்படம் வருகின்ற நவம்பர் 28ம் தேதியன்று ரீ ரிலீஸ் ஆகிறது. இதற்காக இந்த படத்தை மீண்டும் படத்தொகுப்பு செய்து 1 மணி நேர 59 நிமிடங்கள் 47 நொடிகளாக நீளத்தை குறைத்துள்ளாராம் லிங்குசாமி. இதனால் இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்துள்ளனர். தணிக்கை குழு யு சான்றிதழ் அளித்துள்ளனர்.




