டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஜனநாயகன்'. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி படம் வெளியாக உள்ளது.
முன்னதாக இப்படத்தில் இருந்து தளபதி கச்சேரி என்ற பாடலை சமீபத்தில் வெளியிட்டனர். துள்ளல் பாடலாக வெளியான இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது. பின்னர் கரூர் சம்பவத்தால் இந்த நிகழ்ச்சி ரத்து என கூறப்பட்டது. இப்போது இசை வெளியீட்டு அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி வருகிற டிச., 27ல் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாய் நடப்பதாக வீடியோவாக வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த வீடியோவில் மலேசியாவில் உள்ள தமிழ் மக்கள் ஜனநாயகன் இசை வெளியீடு மற்றும் விஜயை புகழும் பேட்டிகள் இடம் பெற்றுள்ளன.




