துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடலை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் கரூர் சம்பவம் காரணமாக அப்போது வெளியிடவில்லை.
இந்நிலையில் இந்த நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக அப்பட வட்டாரங்களில் கூறுகிறார்கள். மேலும், இப்படத்தில் இடம்பெற்று இருந்த அரசியல் ரீதியான சில டயலாக்குகளில் தற்போது சில திருத்தங்களை செய்யுமாறு கூறியிருக்கிறாராம் விஜய். அதன் காரணமாகவே டப்பிங் பணிகளுக்கு முன்பு அந்த டயலாக்குகளில் மாற்றம் செய்யப் போகிறார் இயக்குனர் வினோத்.
மேலும், இப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் மாதம் நடைபெறும் நிலையில் டிரைலரை ஜனவரி முதல் நாளில் வருடப்பிறப்பு அன்று வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். இப்படம் திரைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் ஜனநாயகன் குறித்த புதிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்பது தெரிய வந்துள்ளது.