தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. ஹிந்தி எதிர்ப்பு போராட்ட கதையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இந்தப் படம் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருவதால் இது இரண்டு படங்களுக்குமிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பராசக்தி படம் கதை சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது தான் எழுதிய செம்மொழி என்ற கதையை திருடி எடுக்கப்பட்டு இருப்பதாக இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில், கடந்த 1965 ஆம் ஆண்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு மொழிப்போரை மையமாக வைத்து ஒரு கதை எழுதி அதை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் கடந்த 2010ல் பதிவு செய்து வைத்துள்ளேன். இந்த கதையை பல தயாரிப்பாளர்களிடத்திலும் கொடுத்துள்ளேன். சேலம் தனசேகரன் என்பவர் நடிகர் சூர்யாவிடம் இந்த கதையை கொடுத்துள்ளார். அவர்தான் இயக்குனர் சுதாவிடத்தில் கொடுத்திருக்கிறார். இந்த கதையை புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற பெயரில் இயக்கி இருக்கிறார். என்னுடைய செம்மொழி கதையை திருடி தான் இந்த பராசக்தி படத்தை இயக்குனர் சுதா எடுத்துள்ளார். அதனால் இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த கதை திருட்டு புகார் குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் விசாரணை நடத்தி ஜனவரி 2 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதனால் அன்றைய தினம் இது உண்மையிலேயே திருடப்பட்ட கதையா? இல்லை வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கா? என்பது தெரியவரும்.