வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா |

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகர் சிவராஜ் குமார், ''நடிகர்கள் அரசியலுக்கு வராமலேயே மக்களுக்கு நன்மை செய்யலாம்'' என்று ஒரு கருத்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்னொரு கன்னட நடிகரான சுதீப், விஜயின் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''சில நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் அரசியலுக்கு செல்கிறார்கள். ஆனால் சிலர் மார்க்கெட்டில் இருக்கும்போதே அரசியலுக்கு செல்கிறார்கள். இது ரொம்ப பெரிய விஷயம். சமூகத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறையே இதற்கு காரணம். அதனால் நடிகர் விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டும். அவர் அரசியலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக மக்களுக்கு நன்மை செய்வார் என நான் நம்புகிறேன்'' என கூறியிருக்கிறார். இந்த நடிகர் சுதீப், விஜய் நடித்த 'புலி' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.