Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை

13 மார், 2026 - 05:16 IST
எழுத்தின் அளவு:
Even-if-you-go-higher,-dont-forget-those-who-helped-you-Dhanushs-advice-to-Ken-Karunas
Advertisement


நடிகர் கருணாஸின் மகன், கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் படம் 'யூத்'. மார்ச் 19ல் ரிலீசாகிறது. இப்பட விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் தனுஷ் பேசியதாவது: யூத் படம் அடைகிற வெற்றி அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர் கருப்பையாவிற்கு தான் சேரும். கென் அதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு வெற்றி அடைந்தாலும் அவரை மறக்க கூடாது. மற்றவர்கள் கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற மனது, பெற்றோர்கள் வளர்ப்பில்தான் உள்ளது.

எல்லார்கிட்டையும் எல்லாம் இருக்கும், ஆனால் கொடுக்க மனம் வராது. நட்பை வார்த்தையில் வைக்காமல் மனதில் வைப்பது நல்லது. 'துள்ளுவதோ இளமை' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா எப்படி விலாசமாக இருந்தாரோ, அப்படி இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் விலாசமாக உள்ளார். இசையால் படம் பேசப்படுகிறது.

'அசுரன்' படத்தில் சிதம்பரம் நம்ம கிட்ட இருந்து படிப்பை மட்டும் எடுத்துக்கவே முடியாதுனு சொன்னேன். ஆனால் இந்த படத்தில் கென் படிப்பை தவிர எல்லாமே பண்ணிட்டு இருக்கான். இந்த படத்தின் முதல் போஸ்டரே மூன்று பேர் பைக்ல போற மாதிரிதான் இருந்தது. சிறை படத்தில் நடித்திருந்த நடிகை அனிஷ்மா இதில் நன்றாக நடித்திருந்தார். அவருடைய சிரிப்பிற்கு நான் ரசிகன்.

கென்னை, அசுரன் திரைப்படத்தின் போட்டோஷூட்டில் தான் பார்த்தேன். அப்போதே வெற்றிமாறனை கூப்பிட்டு இந்த பையன் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். உருண்டையாக பெரியதாக இருக்கிறான், அதனால் வேண்டாம் என்றேன். ஆனால் வெற்றிமாறன் அவன் சரியாக இருப்பான் என்று சொன்னார். அதன்பிறகு முதல்நாள் படப்பிடிப்பில்தான் அவனை பார்த்தேன், முதல் ஷாட்டிற்கு பிறகு அவனுக்குள் ஏதோ இருக்கிறது என்று தெரிந்தது.

நானும் கென்னும் பப்ஜி (PUBG) நண்பர்கள். முதன்முதலில் என்னிடம் படம் இயக்குகிறேன் என்று கென் சொன்னபோது நான் இப்போது வேண்டாம் இன்னும் கத்துக்கோ என்று சொன்னேன். ஆனால் என்னால் முடியும் என்று அவன் சொல்லி இன்று அதை நிரூபித்திருக்கிறான்.

2000ம் காலகட்டத்தில் நான் சினிமாவிற்கு வந்தபோது எனக்கு முன்னால் இருக்க கூடிய மூத்த நடிகர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வார்கள், ஆனால் இப்போது அப்படி இல்லை. இன்று வரக்கூடிய நடிகர்கள் சீக்கிரம் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப் பார்க்கும் போது 16 வயதில் சினிமா வந்தேன், நான்தான் ரொம்ப நாட்களை வீணாக்கிவிட்டேன் என்று தோன்றும்.

கென் வயதில் இருப்பவர்கள் திசை மாறி செல்வதை நானே நிறைய பார்த்திருக்கிறேன், ஆனால் கென் அதெல்லாம் எதுவுமே நினைக்காமல் அவன் பெற்றோர் கஷ்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று நினைத்தான். கென் என்னுடைய பையன் மாதிரிலாம் இல்லை. லப்பர் பந்து பட டயலாக் மாதிரி அவன் என்னுடைய பையன் தான். இவ்வாறு தனுஷ் பேசினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!'29' படத்தின் டப்பிங் பணிகள் ... விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! விஜய் குறித்த கேள்வி: பதில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

14 மார், 2026 - 07:03 Report Abuse
முருகன் தற்போது தன் தான் அடுத்த.....என் கூறும் ஒருவருக்கு தனுஷ் கொடுத்த செய்தி
Rate this:
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
14 மார், 2026 - 06:03 Report Abuse
நிக்கோல்தாம்சன் அவரது குடும்பத்துக்கே முதுகில் குத்துவதுதான் கைவந்தகளை , அவரிடம் போயி அட்வைஸ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap