மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

'மேயாத மான், ஆடை' ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார். 'மாஸ்டர், லியோ, விக்ரம்' உள்ளிட்ட படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியவர். தற்போது 'சர்தார் 2, கராத்தே பாபு' ஆகிய படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.
தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு ரத்னகுமார், கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பென்ச்' மற்றும் லோகேஷ் கனகராஜின் 'ஜீ ஸ்குவாட்' இருவர் நிறுவனங்களின் தயாரிப்பில் '29' என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக 'ரெட்ரோ' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க 2000ம் காலகட்ட காதலை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இப்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளை நேற்று அலுவலக பூஜை உடன் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.