புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

தனுஷ் நடித்த வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. மலையாள நடிகை என்றாலும் கூட தெலுங்கில் கவனம் செலுத்தி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக குவ்வால செருவு காட் என்கிற வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார் சம்யுக்தா. ஒரு கட்சிக்குள் நடக்கும் உட்பூசல்களை மையப்படுத்தி அரசியல் பின்னணியில் இந்த வெப்சீரிஸ் தயாராகி வருகிறது. இதில் கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடித்துள்ளார்.
இந்த வெப்சீரிஸ் நடித்தது குறித்து சம்யுக்தா கூறும்போது, “நான் இதுவரை பார்த்திராத ஒரு உலகமாக இது இருக்கிறது. அதனால் இயக்குனர் மற்றும் கதாசிரியருடன் அமர்ந்து விவாதித்து ஒவ்வொரு காட்சியையும் ரிகர்சல் செய்து நடித்திருக்கிறேன். இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரம் என்பதுடன் முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.




