'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

இயக்குனர் பாரதிராஜா திரைப்படத்திற்கு வந்ததே நடிகராகத் தான். ஆனால் நடிப்பு வாய்ப்பு கிடைக்காமல் போனதால் உதவி இயக்குனர் ஆகி பின்பு இயக்குனர் ஆனார். என்றாலும் அவரது நடிப்பு ஆர்வம் தீராமல் இருந்ததால் அவரது படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அவராகவே நடித்தார். சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் பாரதிராஜா.
பாரதிராஜா பற்றி இன்னும் ஒரு அறியப்படாத முகம் அவர் ஒரு டப்பிங் கலைஞர் என்பது. 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் விஜயன் நடித்த போது அவரது குரலில் மலையாள வாசனை இருந்ததால் பாரதிராஜாவே அவருக்கு டப்பிங் பேசினார். காதல் வழிந்து ஓடும் அந்த படத்தின் வசனங்கள் இப்போதும் ரசிக்கப்படுகிறது.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் தியாகராஜனை வில்லனாக அறிமுகப்படுத்தினார். ஆனால் தியாகராஜனின் குரல் ஒரு மீனவ சண்டியரின் குரலாக இல்லை. இதனால் அவருக்கும் பாரதிராஜாவில் டப்பிங் பேசினார். 'வேதம் புதிது' படத்தில் சில காரணங்களால் நிழல்கள் ரவி டப்பிங் பேச முடியாததால் அதற்கும் பாரதிராஜாவே பேசினார்.
இயக்குனர் மணிவண்ணனை 'கொடி பறக்குது' படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார். மணிவண்ணனின் நையாண்டித்தனமான குரல் வில்லன் கேரக்டருக்கு பொருத்தமாக இல்லாததால் அதற்கும் பாரதிராஜாவே டப்பிங் பேசினார்.




