'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

வீணை பாலசந்தர் என்கிற எஸ்.பாலசந்தர் இயக்கிய படம் 'அவன் அமரன்'. கம்யூனிச சித்தாந்தங்களை மையமாகக் கொண்டு வெளிவந்த முதல் படம். ஒரு மில் முதலாளி செய்யும் கொடுமைகளும், அதற்கு எதிராக நடக்கும் தொழிலாளர் போராட்டங்களும் தான் படத்தின் கதை களம்.
படத்தின் கதை, வசனத்தை எழுதியதுடன், படத்தை தயாரித்தவர் நாகர்கோயில் நாகராஜன். மில் முதலாளியாக டி.எஸ். பாலையா நடித்தார். அவரை எதிர்த்து போராடும் தொழிலாளர் சங்க தலைவர் கே.ஆர். ராமசாமி நடித்தார், அவரது காதலி லல்லியாக ராஜசுலோசனாவும், தாய் மரியம்மாளாக கண்ணாம்பாவும் நடித்திருந்தனர்.
சிக்கலான அரசியல் கருத்துக்களை படம் பேசியதால் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. முதல்முறை படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் 72 இடங்களில் கட் கொடுத்தனர். இதை எதிர்த்து ரிவைஸிங் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டது. அங்கு 72 கட்டுகள் 52 ஆக குறைக்கப்பட்டன. அதுவும் அதிகம் என்பதால் தயாரிப்பாளர் வேறு வழிகளில் முயற்சியைத் தொடர்ந்தார்.
அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, பாலச்சந்தரின் வீணை இசைக்கு பெரிய ரசிகர். பாலச்சந்தர் தனது செல்வாக்கை பயன்படுத்தி இறுதியில் படத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு திரையிட்டுக் காட்டினார்.
நேரு படத்தைப் பார்த்த பின் கட் செய்ய வேண்டிய எண்ணிக்கை 52 இல் இருந்து 35 ஆக குறைக்கப்பட்டு படம் திரைக்கு வந்தது. இந்த சிக்கலால் படம் வெளியாவது ஆறு மாதங்களுக்கு மேல் தள்ளிப் போனது. மிகவும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய இந்த படம் தோல்வி அடைந்தது.




