Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா

27 மார், 2026 - 06:20 IST
எழுத்தின் அளவு:
Roja-returns-to-TV-after-a-long-break
Advertisement

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கிலும் 90களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா. சினிமவை விட்டு விலகுவதற்கு முன்பே தீவிர அரசியலில் இறங்கினார். 2004ல் நகரி, 2009ல் சந்திரகிரி தொகுதிகளில் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2014 மற்றும் 2019ல் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2022 முதல் 2024 வரை ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2024ல் நகரியில் போட்டியிட்டு தோற்ற பின்பு மீண்டும் சினிமா பக்கம் நடிக்க வந்துள்ளார். தெலுங்கில் நடிக்காமல் தமிழில் 'லெனின் பாண்டியன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்து 'அன்பே டயானா' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளன.

சினிமா, அரசியல் என இரண்டிலும் மாறி மாறி பயணித்து வந்தாலும் அவ்வப்போது டிவி பக்கமும் போய்விட்டு வருவார். தெலுங்கு, தமிழ், கன்னட டிவி ஷோக்களில் நடுவராகக் பங்கேற்றுள்ளார். ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் டிவி ஷோ ஒன்றில் நடுவராகப் பங்கேற்க உள்ளார்.

விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் 7வது சீசனில் ரோஜாவும் ஒரு நடுவர். இதற்கான முன்னோட்ட வீடியோ ஏற்கெனவே வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா, டிவி ஷோ என இந்தப் பக்கம் வந்தவர் மீண்டும் தெலுங்குப் பக்கமும் போவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரையில் இருந்து விலகுகிறார் சுபிக்ஷா: சினிமாவில் கவனம் செலுத்த முடிவுசின்னத்திரையில் இருந்து ... திருவிளையாடல், அவள் ஒரு தொடர்கதை, பைசன் : ஞாயிறு திரைப்படங்கள் திருவிளையாடல், அவள் ஒரு தொடர்கதை, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap