சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்களை இயக்கியவர் மணிகண்டன். காக்கா முட்டையும் இவரின் சிறந்த படங்களில் ஒன்று. இவர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய முத்து என்கிற காட்டான் வெப்சீரிஸ் இன்று ஓடிடியில் வெளியாகி விட்டது. இது தொடர்பான நிகழ்ச்சியில் மணிகண்டன் பங்கேற்கவில்லை. வெப்சீரியஸ் குறித்து எதுவும் பேசவில்லை. வெப்சீரிசை அவர் மட்டுமல்ல, அஜித்குமார் என்பவரும் இணைந்து இயக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிகண்டனுக்கு என்னாச்சு என்று விசாரித்தால், இந்த வெப்சீரிஸ் சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி தான் தயாரிப்பாளர். ஆனாலும், சில கருத்து வேறுபாடு, பிரச்னைகளால் அவர் விலகிவிட்டார். மீதியை அஜித் இயக்கினார். அவருக்கும், ஓடிடி நிறுவனத்துக்கும்தான் பிரச்னையாம். தவிர, அவருக்கு சில உடல்நல பாதிப்பால் விழாவில் கலந்து கொள்ளவில்லையாம். ஆனாலும் அந்த விழாவில் பங்கேற்ற விஜய்சேதுபதி உட்பட பலரும் மணிகண்டனை பாராட்டினார்கள்.