10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

இயக்குனர் பாரதிராஜா சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். நேற்றுமுன்தினம் முதல் அவர் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரவுகின்றன. குறிப்பாக, சோஷியல் மீடியாவில் பல விரும்பதகாத செய்திகள் தொடர்ந்து பரப்படுகின்றன. அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை விடப்பட்டது. ஆனாலும், அந்த செய்திகள் தொடர்ந்தன.
இந்நிலையில், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் திரையுலகினர் இன்று காலை பாரதிராஜா அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். பின்னர், ஆர். கே செல்வமணி பேசுகையில் ''இயக்குனர் பாரதிராஜா குறித்து சில நாட்களாக தவறான தகவல் வருகிறது. இன்று நாங்கள் அவரை சந்திக்க வந்தோம். அவர் ஐசியூவில் இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் உறுப்புகள் நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாங்கள் அவரை சந்திக்க முடியவில்லை. நேற்று அவரை குடும்பத்தினர் சந்தித்துள்ளனர்.
நாங்கள் டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தோம். அவர் மீது அக்கறை உள்ளவர்கள் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை சொல்வதை மட்டும் நம்புங்கள். ஆர்வகோளாறு காரணமாக தவறான செய்திகளை பரப்பாதீர்கள்'' என்றார்.
அதை தொடர்ந்து மருத்துவமனை சார்பில் பாரதிராஜா உடல்நிலை குறித்த அறிக்கை விடப்பட்டுள்ளது. அதில் பாரதிராஜாவுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. ஐசியூவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என தெ ரிவிக்கப்பட்டுள்ளது.