'ஜனநாயகன்' லீக் : நாயகி தெரிவித்த கண்டனம், நாயகன் விஜய் அமைதி ஏன்? | இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் | மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி | ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை | வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் | 'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா? | ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? |

ரவிமோகன் நாயகனாக நடித்த 'கோமாளி' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்த படம் 100 கோடி வசூலித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த 'டிராகன், டியூட்' படங்களும் 100 கோடி வசூலித்து கோலிவுட்டில் அவருக்கு ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தன.
இந்த நிலையில் அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், அடுத்தடுத்து நடிக்க புதிய படங்களில் கமிட்டாகி வரும் பிரதீப் ரங்கநாதன், சில கோடிகளில் இருந்த தனது சம்பளத்தை தற்போது 25 கோடியாக உயர்த்தி இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.