ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

இயக்குனர் ராஜூ முருகன் 'குக்கூ, ஜோக்கர்' என தரமான படங்களை தந்தவர் 'ஜிப்ஸி, ஜப்பான், மை லார்ட்' என அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. தற்போது ராஜூ முருகன் அளித்த பேட்டியில் அவரின் திரைபயணத்தின் ஆரம்ப கட்டத்தை குறித்து பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, "முதன்முதலில் நான் 'மகதீரா' பாணியில் ஒரு வரலாற்று படத்தின் கதையை எழுதினேன். இந்த கதையை ஒரு தயாரிப்பாளரின் மூலம் நடிகர் சிலம்பரசனிடம் கூறினேன். அவரும் கதையை கேட்டு பிடித்துள்ளது என்றார். இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் நானும், சிம்புவும் இந்த கதை குறித்து பேசினோம். ஆனால், அந்த காலகட்டத்தில் சிம்பு இயக்குனர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். அதனால் என் படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை" என தெரிவித்துள்ளார் ராஜூ முருகன்.




