திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர் அஸ்வதி. நடன கலைஞரான இவர் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படம் வெளிவரவில்லை. 1986ல் பாலச்சந்திர மேனன் இயக்கிய 'இதிஹய்லி' என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றார். சினிமாவிற்காக தனது பெயரை பார்வதி என்று மாற்றிக் கொண்டார். 1980களின் பிற்பகுதியிலும், 1990களின் முற்பகுதியிலும் மலையாளத் திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக இருந்தார்.
மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பார்வதி தமிழில் நடித்த ஒரே படம் 'பூவுக்குள் பூகம்பம்'. இதில் அவர் தியாராஜன் ஜோடியாக நடித்தார். இந்த படம் தோல்வி அடையவே அவர் தமிழில் நடிக்காமல் மலையாளத்திலேயே கவனம் செலுத்தினார்.
நடிகர் ஜெயராமை 1992ம் ஆண்டு மணந்த பார்வதி, அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தற்போது அவரது மகன் நடித்து வருகிறார்.




