மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தமிழ் சினிமாவிலிருந்து அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை ஏகப்பட்ட ஹீரோயின்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். வைஜெயந்திமாலா, ஜெயபிரதா எம்பி ஆக இருந்து இருக்கிறார்கள். இப்பொழுது முன்னணி அரசியல்வாதிகளாய் இருக்கும் ரோஜா, குஷ்பு, கவுதமி, விந்தியா போன்றவர்களுடன் ஒரு காலத்தில் ஹீரோயின்கள் தான். அந்த வரிசையில் வருங்காலத்தில் திரிஷாவும் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
காரணம் ரோஜா குஷ்பு, ஜெயபிரதா போன்றவர்கள் கடுமையான விமர்சனங்களை, கடுமையான போராட்டங்களை பொதுவெளியிலிருந்து சந்தித்தனர். அந்த மன பக்குவம் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அந்த அனுபவம் கொடுத்த தைரியத்தில் அரசியலுக்கு வந்தார்கள். அதேபோல் சமீபகாலமாக திரிஷாவும் கடும் விமர்சனங்களை சந்திக்கிறார். அது அவருக்குள் ஒரு உத்வேகத்தை வைராக்கியத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்பொழுது நடிகர் விஜயின் தொடர்பு உள்ளிட்ட விஷயங்களில் சிக்கி தவிக்கிறார் திரிஷா. இந்த அனுபவம் அடிப்படையில் விரைவில் இவரும் அரசியலுக்கு வருவார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.