Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவுக்கு டாட்டா சொல்கிறாரா திரிஷா?

18 மார், 2026 - 02:04 IST
எழுத்தின் அளவு:
Is-Trisha-saying-Tata-to-cinema
Advertisement


'மெளனம் பேசியதே, லேசா லேசா' படங்களில் இருந்து திரிஷாவின் சினிமா பயணம் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் இதுவரை 75க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டார். 2002ல் தொடங்கிய அவரின் கலைப்பயணம் 24வது ஆண்டாக தொடர்கிறது. 'தக்லைப்' பட தோல்விக்குபின் திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இப்போது சூர்யாவுடன் 'கருப்பு', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ராம்' ஆகிய 3 படங்களில் மட்டுமே திரிஷா நடித்து வருகிறார்.

41 வயதாகி விட்ட திரிஷா சினிமாவுக்கு முழுக்கு போடப்போகிறார். அவர் சினிமாவில் இனி நடிக்கமாட்டார். அதற்கு காரணம் அவரை சுற்றி நடக்கும் அரசியல் பிரச்னைகள், பஞ்சாயத்துகள். அவரால் படப்பிடிப்பில் நிம்மதியாக நடிக்க முடியாது. ஆகவே, கடந்த சில மாதங்காக அவர் கதை கேட்கவில்லை. புதுப்படங்களில் கமிட்டாகவில்லை. சினிமாவுக்கு டாட்டா சொல்லப்போகிறார் என சில நாட்களாக தகவல் கசிகிறது. அவர் சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகப்போகிறார்.

அதற்காகவும் புதுப்படங்களில் கமிட் ஆக மறுக்கிறார் என்று ஒரு தரப்பும் சொல்கிறது. ஆனால், இதுவரை திரிஷா தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அவருக்கு நெருக்கமானவர்களோ இது ஒருவகை வதந்தி, திரிஷாவுக்கு எதிரானவர்கள் கிளப்பிவிடுகிறார்கள். அவருக்கு சினிமா மீது காதல் அதிகம். எந்த வயதிலும் சினிமாவை விட்டு விலகமாட்டார் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படத்தில் ஷோபனா: 35 ஆண்டுகளுக்குபின் கூட்டணிரஜினி படத்தில் ஷோபனா: 35 ... மூன்றாவது முறையாக சுந்தர் சி, வி.இசட் துரை கூட்டணி மூன்றாவது முறையாக சுந்தர் சி, வி.இசட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
19 மார், 2026 - 10:03 Report Abuse
Senthoora ஆடிய கால்களும், பாடிய வாய்களும், பசங்களுக்கு ஆப்புவைத்த பெண்களும் ஒதுங்கி போனதா சரித்திரம் இல்லை, திரும்ப வருவாங்க, சாவித்திரி, kr விஜயா, சந்திரபாபுபோல கடைசியில் அனாதையாக தான் வாழ்ந்து போவாங்க, இது திரையுலயில் சாதாரணமா நடப்பது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap