மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

குட் பேட் அக்லிக்கு பின் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதி ஆகி உள்ளது. ஆனால் அந்த படத்துக்கு தயாரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அஜித்தின் அடுத்த படத்தை சிவா இயக்குவதும், அதற்கடுத்த படத்தை வெங்கட் பிரபுவும் இயக்குவது முடிவாகி உள்ளதாம். அஜித்தை வைத்து விஸ்வாசம், வீரம், விவேகம், படங்களை இயக்கியவர் சிவா. இப்போது கங்குவா படத்துக்குபின் அடுத்த படத்தை இயக்க முயற்சிக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இவர்களை தவிர, ஏ.எல் விஜயும் அஜித்தை வைத்து படம் பண்ண முயற்சிக்கிறார். ஆனால் இந்த படங்களுக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது. அஜித் இப்போது 180 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பது குறிப்பிடத்தக்கது.