சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் |

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில், பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் 'உஸ்தாத் பகத் சிங்' படத்தில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வில்லன் (?) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரைலரில் அவர் ஒரு சில 'பிரேம்கள்' மட்டுமே வந்தார். இருந்தாலும் நேற்று நடைபெற்ற முன் வெளியீட்டு விழாவில் அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பார்த்திபன், “நான் பார்த்திபன்… ராதா கிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன், ஆமாம் நாயுடு பையன். ஆனால், நான் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் தெலுங்கை விட தமிழ் நன்றாக பேசுவேன். இந்தப் படம் வெளிவந்த பிறகு இதன் வெற்றி விழாவில் நிச்சயம் தெலுங்கில் பூர்த்தியாகப் பேசுவேன் என இந்த மூர்த்தி சொல்கிறேன். மூர்த்தி என்பது எனது ஒரிஜனல் பெயர்,” என்றார்.
வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த பலர் இருக்கிறார்கள். அதேசமயம், அவர்களது தாய் மொழியில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தங்களது உண்மையான அடையாளத்தை வெளிக்காட்டுவதில் மகிழ்கிறார்கள். அப்படித்தான் பார்த்திபனும் மகிழ்ந்து பேசியுள்ளார். அதில் தனது சாதியையும் அவர் குறிப்பிட்டுப் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பார்த்திபனின் குருநாதரான பாக்யராஜ், சாதிப் பெருமையைப் பேசியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் பார்த்திபனின் பேச்சும் இப்போது சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது.
சமீபத்தில் த்ரிஷா பற்றி அவர் பேசிய சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார் பார்த்திபன்.