மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கதாநாயகியாக நஸ்ரியா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்லின் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பிரபலமான நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக படக்குழு நடிகர் சிலம்பரசனை அணுகியுள்ளனர். ஆனால், இன்னும் சிம்பு சம்மதம் தெரிவிக்காமல் யோசித்து கூறுகிறேன் என தெரிவித்துள்ளார் என்கிற தகவல் பரவி வருகிறது.