Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, தனுஷ், சூர்யா நிராகரிப்பு... வேள்பாரிக்கு ஆதரவு கொடுக்கப்போவது யார்?

18 மார், 2026 - 01:42 IST
எழுத்தின் அளவு:
Rajini,-Dhanush,-Suriya-reject...-Who-will-support-Velpari
Advertisement


எப்படியாவது 'வேள்பாரி' கதையை சினிமாவாக்க வேண்டும் என்று கடும் முயற்சி செய்கிறார் இயக்குனர் ஷங்கர். கொரோனா காலத்திலேயே அந்த படத்துக்கு திரைக்கதை எழுதி விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அப்போதிலிருந்தே அந்த கதைக்கு தகுந்த ஹீரோவை தேட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அந்த கதையில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் ஏனோ மறுத்துவிட்டார். அடுத்து சூர்யாவை வைத்து அந்த படம் பண்ண நினைத்தார், அதுவும் நடக்கவில்லை.
ரஜினியை சந்தித்து கதை சொன்னார். அடுத்த படங்கள் காரணமாக அவரும் வேள்பாரியை நிராகரிக்க, தனுசிடம் சென்றார். அவரும் சில ஆண்டுகள் பிஸி என்று கூறிவிட்டால், யாரை வைத்து படம் பண்ணுவது என்று ஷங்கர் தவிக்கிறாராம். பெரிய பட்ஜெட் படமென்பதால் முன்னணி ஹீரோதான் நடிக்க வேண்டும் என்பதில் ஷங்கர் உறுதியாக இருக்கிறாராம். இதற்கிடையில், வேள்பாரி படத்தை தயாரிப்பது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஷங்கரின் கடைசி சில படங்கள் சரியாக போகவில்லை. வேள்பாரியை தயாரிக்க பல நுாறு கோடி பட்ஜெட் தேவைப்படும். ஷங்கரை நம்பி அந்த முதலீட்டை போடுபவர் யாராக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 3' படப்பிடிப்பு பாதியில் நிற்பது தனிக்கதை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
9 மில்லியன் பார்வைகளைக் கடந்த ரஜினிகாந்த் அறிக்கை9 மில்லியன் பார்வைகளைக் கடந்த ... ரஜினி படத்தில் ஷோபனா: 35 ஆண்டுகளுக்குபின் கூட்டணி ரஜினி படத்தில் ஷோபனா: 35 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap