Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம்

26 மார், 2026 - 10:49 IST
எழுத்தின் அளவு:
Dileeps-daughter-celebrates-26th-birthday-with-father-estranged-from-mother-for-ten-years
Advertisement


மலையாள நடிகர் திலீப் 90களில் நடித்து வந்த காலகட்டத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகளும் பிறந்தார். கடந்த 2016ல் திலீப், மஞ்சு வாரியார் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு நடிகர் திலீப் தன்னுடன் நடித்த இன்னொரு நடிகையான காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற பெண் குழந்தையும் உண்டு.

அதேசமயம் மஞ்சு வாரியர் தற்போது தனியாகவே வசித்து வருகிறார். இத்தனைக்கும் தனது தந்தை திலீப், தாய் மஞ்சு வாரியாருடன் எப்போது பிரிந்தாரோ அப்போதிருந்தே தந்தையுடன் தான் வசித்து வருகிறார் மகள் மீனாட்சி. அப்போது பள்ளி செல்லும் சிறுமியாக இருந்தவர் தற்போது டாக்டர் படிப்பை முடித்து தனது 26வது பிறந்த நாளையும் தற்போது அயர்லாந்தில் தனது தந்தை திலிப்புடன் கொண்டாடியுள்ளார்.

ஆனால் இந்த பத்து வருட காலகட்டத்தில் தனது தாய் மஞ்சு வாரியரை அவர் ஒரு முறை கூட சந்தித்ததில்லை. சந்தித்தது போன்ற ஒரு புகைப்படமோ அல்லது செய்தியோ கூட வெளியாகவில்லை. அதேபோல தனது மகள் மீனாட்சிக்கு இத்தனை வருடங்களில் எந்த ஒரு பிறந்தநாளுக்கும் மஞ்சு வாரியர் வாழ்த்து சொன்னதாகவும் செய்தி எதுவும் இல்லை. அந்த வகையில் இருவருமே கடந்த 10 வருடங்களாக ஒருவருக்கொருவர் பாராமுகம் காட்டி வருகின்றனர் என்பது வியப்பிற்குரிய விஷயம் தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை ... 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் 'பெத்தி' படப்பிடிப்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap