Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

26 மார், 2026 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Fans-waiting-for-Ajith-64-announcement
Advertisement

அஜித்தின் 63வது படமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' படம் கடந்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. 200 கோடிக்கும் அதிகமாக அப்படம் வசூலிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அப்படத்திற்குப் பின் அவரது 64வது படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போவதாக உறுதியாகச் சொன்னார்கள்.

ஆனால், ஒரு வருட காலமாக அப்படத்தின் அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. அப்படம் வெளியான பின்பு அஜித் மோட்டார் ரேஸில் பங்கு பெற துபாயில் கடந்த ஒரு வருடமாக இருந்தார். அப்போதும் இயக்குனர் ஆதிக் அவரைச் சந்தித்து 64வது படத்தின் கதை குறித்து விவாதித்துள்ளார்.

பிப்ரவரி மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றார்கள். அத்தகவல் வெளியாகியும் ஒரு மாதம் ஆகிவிட்டது. விஜய் தீவிர அரசியலில் இறங்கிவிட்டதால் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸில் பரபரப்பை ஏற்படுத்தும் அவரது சமகால நடிகராக அஜித் மட்டுமே இருக்கிறார்.

விஜய்யின் இடத்தையும் சேர்த்து அஜித் தான் நிரப்பப் போகிறார் என திரையுலகில் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அஜித்தோ அடுத்த பட அறிவிப்பிற்கே இவ்வளவு தாமதம் செய்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவுஇனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் ... பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap