Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் | மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான டிசி படத்தின் புதிய போஸ்டர் | ராஷ்மிகாவின் ஹாக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | 'ப்ரோ கிளப்' ஆக மாறும் 'ப்ரோ கோட்' ? | சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன் | நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு | 'காஞ்சனா' ரீரிலீஸ் : முதல் நாளில் 3 கோடி வசூல் | ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 22 நாட்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா

26 பிப், 2026 - 03:02 IST
எழுத்தின் அளவு:
Actress-Nirosha-hug-and-cry-her-sister-Radhika-after-watching-Thaai-Kizhavi
Advertisement


நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்த 'தாய் கிழவி' நாளை ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இந்த படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் நடந்தது. பல சினிமா விஐபிகள் இதில் கலந்துகொண்டனர். படம் முடிந்தவுடன் அக்கா ராதிகாவை கட்டி பிடித்து பாராட்டி, கண்ணீர் வீட்டு அழுதார் தங்கையும் நடிகையுமான நிரோஷா. அவரிடம் பேசினோம்.

'தாய் கிழவி' படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அக்காவை கட்டிபிடித்து பாராட்டினேன். என்னை அறியாமல் கண்ணீர் விட்டு கதறிவிட்டேன். காரணம், எங்களுக்கு என் அம்மா நினைவுக்கு வந்தார். அந்த படத்தில் பல காட்சிகளில் அக்கா வடிவில் அம்மாவை பார்த்தேன். பல சமயங்களில் பெண்கள் தன்னம்பிக்கையாக இருக்க வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும். யாரையும் சார்ந்து இருக்க கூடாது.

நமக்காக சேர்த்து வைக்க வேண்டும். நமக்காக நேரம் செலவழிக்க வேண்டும் என்று அவர் எங்களிடம் பேசியிருக்கிறார். படத்தில் அப்படிப்பட்ட கருத்தும் சொல்லப்படுகிறது. அதனால், உணர்ச்சி வயப்பட்டுவிட்டேன். தவிர, படத்தில் அவ்வளவு நகைச்சுவை காட்சிகள், அதைகைதட்டி சிரித்து மகிழ்ந்தேன். ரொம்ப நாளைக்குபின் தியேட்டரில் அவ்வளவு சிரிப்பு சத்தம். அக்காவின் நடிப்பு பற்றி சொல்ல வேண்டாம்.

'ஜீன்ஸ், கிழக்கு சீமையிலே' தொடங்கி பல படங்களில் நடிப்பில் மிரட்டியவர். இந்த படத்தில் தாய்கிழவியாக சிறப்பாக நடித்துள்ளார். இந்த மாதிரி நடிக்க ஆட்கள் இல்லை. சிவாஜி, எங்கள் தந்தை எம்.ஆர்.ராதா, ஆச்சி மனோரமா, கமல்ஹாசன் வரிசையில் அக்காவும் இருக்கிறார் என்பதை இந்த படம் நிரூபித்துள்ளது. இப்படிப்பட்ட நல்ல படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன், இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு நன்றி. இந்த ஆண்டின் சிறந்த படமாக மட்டுமல்ல, இன்னும் பல ஆண்டுகள் இந்த படம் பேசப்படும்.

அக்கா ராதிகாவுக்கு தேசியவிருது கிடைக்கவில்லையே என்று பலரும் ஆதங்கப்படுகிறார்கள். எனக்கும் அது இருக்கிறது. இந்த படத்தில் கிடைக்கும். அப்படி விருது கொடுத்தால் அந்த விருதுக்குதானே பெருமை. இன்னமும் தாய்கிழவி பட பாதிப்பில் இருந்து மீளவில்லை' என்கிறார். பொதுவாக தமிழ் படங்களில் சிறப்பு காட்சிகளில் கலந்து கொள்ளாத நடிகர் சூர்யா, ஜோதிகா தம்பதியினரும் நேற்று தாய்கிழவி பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அது போன மாசம், இது இந்த மாசம்…விஜய் ரசிகர்களின் 'உருட்டு'அது போன மாசம், இது இந்த மாசம்…விஜய் ... ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap