ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' | தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ? | 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு | அண்ணி மீது ஹன்சிகா வழக்கு | பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி |

ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்த, சரத்குமார், ராய் லட்சுமி, கோவை சரளா மற்றும் பலர் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் 'காஞ்சனா'. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் நேற்று தமிழ், தெலுங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. பெரிய அளவில் எந்தவிதமான விளம்பரங்களும் செய்யாமல் இந்தப் படத்தை வெளியிட்டார்கள்.
தெலுங்கில் மட்டுமே இப்படம் நேற்று முதல் நாளில் 3 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ராகவா லாரன்ஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். 'காஞ்சனா' படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டதாலும், 'காஞ்சனா' சீரிஸ் படங்களில் அந்தப் படத்திற்கு எப்போதுமே தனி மவுசு இருப்பதாலும் இந்த அளவிற்கு வசூல் கிடைத்துள்ளது என்கிறார்கள்.
நேற்று வெளியான சில புதிய படங்களை விடவும் இந்தப் படம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளது என்பதுதான் குறிப்பிட வேண்டிய ஒன்று.