திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

சென்னையில் நடந்த தாய் கிழவி வெற்றி விழாவில் பேசிய நடிகை ராதிகா, 'இந்த படத்துக்காக லாபத்தில், வியாபாரத்தில் பங்கு என்ற ஒப்பந்தம் அடிப்படையில் சம்பளம் பெற்றேன். தமிழில் இப்படி சம்பளம் வாங்கிய ஒரே நடிகை நான்தான் என்றார். தெலுங்கில் அல்லு அர்ஜூன் போன்ற சில ஹீரோக்கள், ஹிந்தியில் பல ஹீரோக்கள் இப்படி சம்பளம் வாங்குகிறார்கள். கன்னடத்தில் சுதீப் இந்த முறைக்கு மாறினார்.
முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பெ றுபவர்கள், படத்தின் வியாபாரத்தில் கணிசமான தொகையை போனஸ் சம்பளமாக பெறுகிறார்கள். படம் ஓட, ஓட அல்லது அதிகவிலைக்கு விற்கப்பட்டால் இவர்கள் சம்பளமும்அதிகரிக்கும். தாய் கிழவி படம் 50 கோடியை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதால் ராதிகா சம்பளம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழில் இந்த முறைக்கு வர நடிகர், நடிகைகள் தயங்குகிறார்கள். காரணம் படம் ஓடாவிட்டால் அவர்களுக்கான சம்பளம் குறைந்துவிடும். இப்போது முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ஓடாத நிலையில் எனக்கு வழக்கமான முறைப்படி சம்பளம் கொடுத்துவிடுங்கள். லாப, நஷ்டம் உங்க ரிஸ்க் என தயாரிப்பாளர்களிடம் சொல்கிறார்களாம். இந்த நடைமுறை தமிழில் வந்தால் நல்லா இருக்கும் என்று பலர் நினைத்தாலும், நடிகர்கள் நழுவுகிறார்களாம்.




