'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2002ல் வெளியான படம் ரெட். இந்த படத்தின் மூலம் சுந்தர்.சி மற்றும் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிங்கம்புலி, ராம் சத்யா என்கிற பெயரில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் பணியாற்றிய போது அவருக்கு அஜித்துக்கும் இடையே மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அது எந்த அளவிற்கு என்றால் 2007ல் அஜித் தான் பில்லா படத்தில் நடித்தபோது சிங்கம்புலியையும் தன்னுடன் மலேசியா படப்பிடிப்பிற்கு உடன் அழைத்துச் செல்லும் அளவிற்கு நெருக்கமான நட்பாக இருந்தது.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சிங்கம்புலி கூறும்போது, “திடீரென ஒரு நாள் அஜித் சார் உங்களை பில்லா படபிடிப்பிற்காக மலேசியா கிளம்பி வரச் சொல்கிறார் என்று தகவல் வந்தது. நடிப்பதற்காகவா என்று கேட்டேன். அது சஸ்பென்ஸ் என்றார்கள். ஆனால் அங்கே மலேசியா சென்றதும் தான் அஜித் என்னுடன் படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக பேசிக்கொண்டு, தான் நடிக்கும் காட்சிகள் பற்றி விவரித்துக் கொண்டு, அது பற்றிய சில ஐடியாக்கள் சந்தேகங்களை பகிர்ந்து கொண்டு என 30 நாட்கள் என்னை தன் அருகிலேயே வைத்துக் கொண்டார்.
இத்தனைக்கும் அந்த படத்தில் ஒரு தொழில்நுட்ப கலைஞராகவோ நடிகராகவோ நான் பணியாற்றவில்லை. ஆனால் 30 நாட்கள் முடிந்ததும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து எனக்காக ஒரு கணிசமான தொகையையும் சம்பளமாக பெற்றுத் தந்தார். அந்த அளவிற்கு என் மீது அவர் அன்பும் நன்மதிப்பும் வைத்துள்ளார்” என்று கூறியுள்ளார் சிங்கம்புலி.




