சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் | தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் | சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி | சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி | 'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” |

இயக்குனர் பாரதிராஜா (84) கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாச கோளாறு மற்றும் வேறு சில உடல்நல பிரச்னைகள் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், அவர் உடல் நிலை சீராக இருக்கிறது. விரைவில் வீடு திரும்புவார் என்று அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை மற்றும் பாரதிராஜா தரப்பில், ''தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதுடன், மருத்துவ நிபுணர்கள் குழுவினால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். தகுந்த மருத்துவ ஆதரவுடன், அவரது உடல்நிலை அளவீடுகள் (Vital parameters) சாதாரண நிலையில் உள்ளன. அவர் அளிக்கப்படும் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார். இது குறித்த கூடுதல் தகவல்கள் தேவைப்படும்போது தெரிவிக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளனர்.