'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான பாரதிராஜா வயோதிகம், மகன் மனோஜ் இறப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில்சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவ, ஆஸ்பிட்டல் நிர்வாகம் மருத்துவ அறிக்கை அளித்தது. இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான ஒரு குழுவும் நேராக ஆஸ்பிட்டல் சென்று விசாரித்தது. அவர் உடல்நிலையில் மாற்றம் இல்லை. ஆனால், தீவிர சிகிச்சை அளிப்பதாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில் சமீபத்தில் அவர் ஆஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுள்ளார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஆனாலும், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதியில்லை. அவர் மறதி மற்றும் சில பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை குடும்பத்தினர் கவனமாக பார்த்து வருகின்றனர். பல்வேறு வதந்திகள், பொய் செய்திகளுக்கு மத்தியில் 84 வயதான அவர் வீட்டுக்கு சென்றுள்ளது நல்ல விஷயம். அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் குறிப்பாக திரையுலகினரின் விருப்பமாக உள்ளது.




