இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி நடிப்பில் சமீபத்தில் பிரதிச்சாயா என்கிற படம் வெளியாகி உள்ளது. அரசியல் பின்னணியில் வெளியாகி உள்ள இந்த படத்தை இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் நிவின் பாலி சினிமாக்காரர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நட்சத்திரங்கள் என்றாலும் தொழில்நுட்ப கலைஞர்கள் என்றாலும் வாரத்தில் ஒரு நாளாவது அவர்களும் தங்களது குடும்பத்துடன் செலவழிக்க இந்த விடுமுறை அவசியம் வேண்டும்” என்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
சினிமாவை பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என நடைமுறையில் இருந்தாலும் கூட பெரும்பாலும் பல படங்களுக்கு அந்த நாட்களில் இரட்டிப்பு சம்பளம் கொடுக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.