'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் |

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. விரைவில் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பெரும்பாலும் தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் கலந்து கொள்வார்கள். இந்தமுறை பாஜ., சார்பில் நடிகைகள் கஸ்துாரி, கவுதமி உட்பட பலரும், அதிமுக, திமுக சார்பில் சிலரும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். வடிவேலு கலந்து கொள்வாரா? திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2011 சட்டசபை தேர்தலில் அப்போதைய திமுக தலைவர் திருவாரூரில் பிரச்சாரம் தொடங்கியபோது வடிவேலுவும் பேசினார். அப்போது விஜயகாந்த்தை கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவைவும் தாக்கி பேசினார். அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற, அடுத்த 10 ஆண்டுகள் அவரின் சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தயங்கினர்.
இந்நிலையில் 2026 தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அவர் கைவசம் படங்கள் அதிகம் இல்லை. தவிர, உதயநிதியுடன் நெருக்கமாக இருக்கிறார். ஆகவே சில தொகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு. இன்னும் சில நடிகர்களும் திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்க உள்ளனர் என்கிறார்கள்.