மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

மலையாளத்தில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வரும் படம் 'பேட்ரியாட்'. இதில் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 'விஸ்வரூபம்' பட எடிட்டரும் 'டேக் ஆப், மாலிக்' படங்களை இயக்கியவருமான மகேஷ் நாராயணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 23ம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நடிகர் மம்முட்டி தற்போது தனது காட்சிகளுக்கான டப்பிங் பேசி முடித்துள்ளார். இந்த டப்பிங் பணிகள் சென்னையில் நடிகை லிசிக்கு சொந்தமான லீ மேஜிக் லண்டன் ஸ்டுடியோவில் நடைபெற்றது டப்பிங் பணியின் போது லிசி மற்றும் அவரது முன்னாள் கணவரும் இயக்குனருமான பிரியதர்ஷன் ஆகியோருடன் மம்முட்டி சந்தித்த புகைப்படம் நடிகை லிசி தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.