மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

மம்முட்டி, மோகன்லால் மற்றும் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம் அடுத்ததாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்குனர் காலித் ரகுமானுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. சில வருடங்களு முன் உண்ட என்கிற ஒரு போலீஸ் கதையில் மம்முட்டிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் தான் காலித் ரகுமான்.
தொடர்ந்து கடந்த வருடம் பிரேமலு புகழ் நஸ்லேன் நடிப்பில் வெளியான ஆலப்புழா ஜிம்கானா என்கிற வெற்றி படத்தை கொடுத்த காலித் ரகுமான் தற்போது மம்முட்டியை வைத்து இயக்க உள்ள புதிய படத்திற்கு மட்டாஞ்சேரி மாபியா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் மம்முட்டி உடன் ஆசிப் அலி, நஸ்லேனும் நடிக்கிறார்கள். கேரளாவில் கொச்சியில் உள்ள மட்டாஞ்சேரி என்கிற பகுதியை மையப்படுத்தி ஒரு கேங்ஸ்டர் படமாக இது உருவாக இருக்கிறதாம்..