பிளாஷ்பேக்: பாலிவுட் படம் இயக்கிய மனோபாலா | பிளாஷ்பேக்: முதன் முதலில் இரண்டு வேடங்களில் நடித்த நடிகை | திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' |

பாரதிராஜா இயக்கிய 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சுபிக்ஷா கிருஷ்ணன். அதன்பிறகு 'கடுகு, கோலிசோடா -2, கண்ணை நம்பாதே, சந்திரமுகி-2' என பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 3 படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
சுபிக்ஷா பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் படங்களில் நடிப்பதற்கு இடையே நடனப் பள்ளியில் பரதமும் கற்றுக்கொடுக்கிறார். மேலும், சில மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பரத கலையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்தர்கள் முன்னிலையில் பரதம் ஆடி அசத்தினார்.
சுபிக்ஷா கூறுகையில், ''பரதம் கலை தெரிந்த நடிகையாக இருப்பது பெருமை. படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இந்த பரதம் எனக்கு உதவியாக இருக்கிறது. மக்களின் நேரடி பார்வையில் என் கலையை சமர்பிக்க எப்போதும் தயங்கியது இல்லை. சமீபத்தில் கூட கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் முன்னிலையில் நடனமாடினேன். பெரிய மேடையை விட, இதுபோல் மக்களின் பார்வையில் நேரடியாக நடனமாடுவதையே அதிகம் விரும்புகிறேன்'' என்றார்.




