Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர்களை போன்று நடிகைகளையும் மதியுங்கள் : அனுஷ்கா கோபம்

20 மார், 2026 - 06:01 IST
எழுத்தின் அளவு:
Respect-actresses-like-actors-Anushka-Kopam
Advertisement

பாகுபலி 2 படத்திற்கு அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது தேர்ந்தெடுத்த, நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. பாகுபலி 2 படத்தில் நடித்து வந்தபோது பிரபாசும், அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அவர்கள் இருவருமே அதை மறுத்தார்கள். அதன்பிறகு இப்போது வரை பிரபாஸை போலவே அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக அவரைப்பற்றி திருமண வதந்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது 44 வயதாகும் அனுஷ்கா ஒரு தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தியை பார்த்து உடனடியாக அதற்கு தனது ரியாக்சனை வெளிப்படுத்தி உள்ளார் அனுஷ்கா. அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது திருமணம் குறித்த வதந்திகளை வெளியிடும் ஒவ்வொரு நேரமும் என்னுடைய வயது 44 என்பதை மீடியாக்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இதே வயதில் எத்தனையோ ஹீரோக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தபோதும் அவர்களின் வயதை யாரும் சுட்டிக்காட்டுவதில்லை. ஆனால் நடிகைகள் விஷயத்தில் மட்டும் இப்படி வயதை சொல்லி அதை பெரிதாக்குகிறார்கள். அந்த வகையில் மீடியாக்கள் நடிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையை நடிகைகளுக்கு கொடுப்பதில்லை என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அனுஷ்கா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ராஷ்மிகா மந்தனாசிறந்த நடிகைக்கான விருது பெற்ற ... 'யூத்' படத்திற்கு சிலம்பரசன் வாழ்த்து 'யூத்' படத்திற்கு சிலம்பரசன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap