பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கென் கருணாஸ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்து மார்ச் 19ல் வெளியான படம் 'யூத்'. பள்ளிப் பருவக் காதலைப் பற்றியும், படிப்பைப் பற்றியும் சொல்லியுள்ள இப்படத்திற்கு இளம் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தில் நடிகர் சிலம்பரசனின் ரசிகராக கென் கருணாஸ் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறனிடம் சினிமாவைக் கற்ற கென் படத்தில் தன்னை சிலம்பரசன் ரசிகராக காட்டிக் கொண்டதன் காரணம் அவருக்குத்தான் தெரியும்.
தற்போது இப்படத்திற்கு சிலம்பரசன், “யூத், புத்துணர்ச்சியும், துடிப்பும், நெகிழ்ச்சியும் நிறைந்த ஒரு படைப்பு, என்னவொரு படம்….
இன்றைய தலைமுறையினரின் மனதோடு ஆழமாக ஒன்றிப் போகும் ஒரு கதை. கென் கருணாஸின் நடிப்பு மிக அற்புதம். தம்பி, நீங்கள் உண்மையிலேயே கலக்கிவிட்டீர்கள். இவ்வளவு இளம் வயதிலேயே நடிப்பிலும், இயக்கத்திலும் முத்திரை பதித்து, படத்தை இவ்வளவு சுவாரசியமாக உருவாக்கியிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
சுராஜ் சார் மற்றும் தேவதர்ஷினி மேடம் ஆகியோருடன் நீங்கள் வரும் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அனிஷ்மா, மீனாட்சி, பிரியான்ஷி ஆகியோர் இந்தப் படத்திற்கு பெரும் துடிப்பையும் உயிரோட்டத்தையும் சேர்த்துள்ளனர். ஜிவி பிரகாஷின் இசை, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது.
தயாரிப்பாளர் கருப்பையா ராம், இவ்வளவு துடிப்பான மற்றும் தரமான படைப்பிற்கு நீங்கள் உறுதணையாக இருப்பதைப் பார்ப்பது பெருமையாக இருக்கிறது,” என நீண்ட பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.