ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவரது 55வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனுஷின் 56வது படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க, தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ளார் என சமீபத்தில் உறுதியானது.
இந்தநிலையில் இன்று எக்ஸ் சமூக வலைதளத்தில் உறியடி விஜய்குமாரின் 'அறிவு' படத்திற்கு தமிழரசன் பச்சமுத்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதற்கு விஜய்குமார், 'நன்றி அய்யா, முடிச்சிட்டு சீக்கிரம் வந்துருவேன்' என பதிலளிக்க, இதற்கு தமிழரசன் பச்சமுத்து 'மதுரைக்கு தான் வரணும் #D56' என பதிவிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விஜய்குமார் 'தனுஷ் 56' படத்தில் நடிக்கிறாரா? அல்லது வசனம் எழுதுகிறாரா? என குழப்பத்தில் பகிர்ந்து வருகின்றனர்.




