வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

சமீபத்தில் மலையாளத்தில் நடிகர் திலீப் நடிப்பில் 'ப ப பா' என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் மோகன்லால் சற்றே நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தில் அவர் தீவிர விஜய் ரசிகராக 'கில்லி' பாலா என்கிற பெயரில் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது வலது கை போன்ற கதாபாத்திரத்தில் திலீப் நடித்தார்.
'கில்லி' படத்தில் விஜய் பயன்படுத்திய ஜிப்ஸி ஜீப் இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளது. அது குறித்து மோகன்லால் சொல்லும்போது ''அந்த ஜிப்ஸி ஜீப்பை விஜய் விரும்பி கேட்டதால் கில்லி படத்திற்காக கொடுத்தேன்'' என்று ஒரு புதிய கதையை சொல்லி அந்த படத்திற்கு பின்னால் நான் கில்லி பாலா என பெயர் மாற்றிக் கொண்டேன் என்றும் சொல்வார். இப்படி மலையாளத்தில் உள்ள முன்னணி ஹீரோ ஒருவர் விஜய்யின் தீவிர ரசிகராக தன்னை காட்டிக்கொண்டு நடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
இந்த நிலையில் படத்தின் கதாசிரியர்கள் இது குறித்து கூறும்போது, “இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என்று மோகன்லாலிடம் சொன்னபோது அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. உடனே சம்மதித்தார்.. மேலும் இதை விஜய் பார்த்தால் நிச்சயமாக சந்தோஷப்படுவார் என்றும் கூறி மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்” என்று கூறியுள்ளனர்.
இதற்கு முன்னதாக கிட்டத்தட்ட கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு 'ஜில்லா' படத்தில் மோகன்லாலும் விஜய்யும் இணைந்து நடித்தனர். அந்த படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையே சிறிய மனக்கசப்பு ஏற்பட்டதாக வெளியே சில செய்திகள் உலா வந்த நிலையில், மோகன்லால் தன்னை விஜய் ரசிகராகவே காட்டிக்கொண்டு இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் அப்படி வெளியான செய்திகளில் உண்மை இல்லை என உறுதி செய்துள்ளார்.




