'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு '2018' என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், 200 கோடிக்கு மேல் வசூலித்தது. அந்தப்படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக மோகன்லாலின் மகள் விஸ்மாயாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி 'தொடக்கம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்புக்கு நன்றி சொல்லி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விஸ்மாயா மோகன்லால்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள ஜூட் சேட்டா.. இப்படிப்பட்ட ஒரு அருமையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காகவும் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பேன் என என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்ததற்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றியை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்த அனுபவம் வாழ்க்கை பயணத்தில் ஒரு முறை மட்டுமே கிடைப்பது போன்று இருந்தது. எனக்கு அழகான ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்ததற்காக உங்கள் மனைவி டயானாவுக்கும் சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.




