மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

ஹிந்தியில் உரி பட இயக்குனர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து திரைக்கு வந்த படம் ' துரந்தர்' . உலகளவில் ரூ. 1400 கோடி வசூலை கடந்தது. ஹிந்தி பதிப்பில் மட்டும் திரைக்கு வந்த இந்த படம் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியிட தடை செய்தனர். இதையும் மீறி தான் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இரண்டாம் வரும் மார்ச் 19ல் ரிலீஸாகிறது. ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.
தற்போது ஆதித்யா தர் ஒரு பேட்டியில் கூறியதாவது, "துரந்தர் படம் பயங்கரவாதம் பற்றிய படம் மட்டும் தான். எந்தவொரு நாட்டையும், மக்களையும் பற்றியது இல்லை. பாகிஸ்தான் சினிமா ரசிகர்களும் இந்தப் படத்தை பார்த்தால் நிச்சயம் விரும்புவார்கள். இந்த படத்திற்கு தடை இருந்த போதும் நல்ல வரவேற்பு பெற்றது" என தெரிவித்துள்ளார்.