சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
இயக்குனர் ஷங்கர், ராம் சரண் இணையும் முதல் படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. இந்த பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக சிரஞ்சீவி, இயக்குனர் ராஜமவுலி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
ஆர்சி 15 என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்க உள்ளதாக சொல்லி உள்ளார்கள். 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரண் நடித்து முடித்துள்ளார். இப்படம் வெளிவந்த பிறகு ராம் சரணின் மார்க்கெட் நிலவரம் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையும் கருத்தில் கொண்டு தான் ஷங்கர், ராம் சரண் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க முடிவெடுத்துள்ளார்களாம்.
ஏஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரை மட்டுமே தனது படங்களுக்கு இசையமைப்பாளராகப் பயன்படுத்தி வந்த ஷங்கர், 'பாய்ஸ்' படத்தில் அவர் நடிகராக அறிமுகப்படுத்திய தமனை இந்தப் படத்தில் இசையமைப்பாளராக நியமித்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் தமன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் அடுத்து இயக்க உள்ள 'அந்நியன்' ஹிந்தி ரீமேக்கின் கதாநாயகன் ரன்வீர் சிங் இந்தப் படபூஜையில் கலந்து கொண்டதில் ஆச்சரியமில்லை. சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் படம் என்பதாலும், தனது அபிமான இயக்குனர் ஷங்கர் என ராஜமவுலி ஏற்கெனவே சொன்னதாலும் அன்புக்காகக் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.