சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

'அனிமல்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக த்ரிப்தி டிம்ரி நடிக்கவுள்ளார் மற்றும் பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
கடந்த வாரத்திலிருந்து இந்த படத்தில் சிரஞ்சீவி அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என தகவல்கள் பரவியது. இதையடுத்து சந்தீப் ரெட்டி வங்கா அளித்த பேட்டி, ஒன்றில் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் கூறியதாவது, "ஸ்பிரிட் படத்தில் சிரஞ்சீவி அப்பா கதாபாத்திரம் மட்டுமில்லை வேறு எந்தவொரு கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை" என உறுதிப்படுத்தியுள்ளார். கூடுதலாக, வெளிநாட்டு நடிகர் டாங் லீ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கேள்வி எழுப்பியதற்கு "நடிக்கின்றார், நடிக்கவில்லை என்பது குறித்து டாங் லீ உறுதியாக கூறவில்லை" என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.